வியக்க வைக்கும் மனித உடலில் உள்ள ரகசியங்கள்

[ο] மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்றுபோய்விடும். ஆனால் மனிதர்களின் ஆயுள் முடியும் வரை வளர்வது காது மட்டும்தான்.

[ο] ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் (முடி) எண்ணிக்கை ஏறத்தாழ 5 லட்சத்திற்கு குறையாமல் இருக்கும். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கையும் உள்ளங்காலும்தான்.

[ο] பொதுவாக இரவில் தூங்கும்போது மட்டும்தான் கண்களை மூடியிருப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால் பகல் வேளையில் விழித்திருந்தாலும் கூட, ஆயிரக்கணக்கான முறை நமது கண்களைச் சிமிட்டுகிறோம். இதை ஆய்வு செய்து பார்த்தால், இரவைத் தவிர பகல் வேளையிலும் கூட பாதி நேரம் நாம் கண்களை மூடிக்கொண்டுதான் இருக்கிறோம்.

[ο] மனித இதயம், இடது பக்கத்தைவிட வலது பக்கம் கொஞ்சம் பெரியதாக இருக்கும். இதயமானது, ஒரு நாளுக்கு ஒரு லட்சம் முறை சுருங்கி விரிகிறது. அப்படியானால் ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட நான்கு கோடி முறை.

[ο] மனித உடலில் உள்ள கையானது, பல ஆயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாகச் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றது. உணவை ஒரு கரண்டியில் எடுக்கும்போது, உடலில் உள்ள 30 இணைப்புகளும் 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.

[ο] ஏறக்குறைய 80 கிலோ எடையுள்ள உடலை 70 முதல் 80 வருடங்களாக தாங்கி நிற்கின்றன பாதங்கள் என்பதே வியப்புக்குரியதுதான்.

[ο] மனித உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, 2 நீச்சல் குளங்களை சுத்தப்படுத்துவதற்கு தேவையான குளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்கத் தேவையான பாஸ்பரஸ், 10 பார் சோப்புகளுக்குத் தேவையான கொழுப்பு, ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருள்கள் உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!