பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் டெல்லி நீதிமன்றத்தில் முன்னிலை

பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் டெல்லி நீதிமன்றத்தில் முன்னிலை

1 mins read
75d0ab89-a972-49eb-a856-65e8ae06ae81
பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண். - படம்: ஊடகம்

புதுடெல்லி: மற்போர் வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கின் தொடர்பில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் டெல்லி நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

இவ்வழக்குக்கான தீர்ப்பை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஏப்ரல் 26ஆம் தேதி வழங்க உள்ளது.

அகில இந்திய மல்யுத்த சங்கத் தலைவராக இருந்தபோது வீராங்கனைகளுக்குப் பிரிஜ் பூஷண் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வினேஷ் போகத் உள்ளிட்ட வீரர்-வீராங்கனைகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்