சந்திரபாபு நாயுடுவிடம் அம்பாசிடர் கார், மனைவியிடம் கார் இல்லை

அமராவதி: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு 1994ல் வாங்கியிருந்த அம்பாசிடர் காருக்குச் சொந்தக்காரர்.

திரு நாயுடு மற்றும் அவருடைய தொழிலதிபர் மனைவி என்.புவனேஸ்வரியின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் 39 விழுக்காடு அதிகரித்து ரூ.931 கோடியாக இருந்தபோதும் மனைவியிடம் வாகனம் எதுவும் இல்லை.

இந்தியாவின் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தபோது, ஆந்திர முன்னாள் முதல்வரான திரு நாயுடு சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் இது தெரியவந்துள்ளது.

கணவரின் சார்பில் புவனேஸ்வரி தாக்கல் செய்த வேட்புமனுவில், கணவரின் சொத்துகளை விட அவருக்கு அதிக சொத்துகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

2019ல் இந்த தம்பதியின் சொத்துகளின் மதிப்பு ரூ.668 கோடி.

ஆக அண்மைய பிரமாணப் பத்திரத்தின்படி, திரு நாயுடுவுக்கு ரூ.2.22 லட்சம் மதிப்புள்ள அம்பாசிடர் கார் உட்பட வெறும் ரூ.4.80 லட்சம் அசையும் சொத்துகள் உள்ளன.

குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனமான ‘ஹெரிட்டேஜ் ஃபுட்ஸ் லிமிடெட்’ நிறுவன துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான புவனேஸ்வரி, ஹெரிட்டேஜ் நிறுவனத்தில் ரூ.763.93 கோடி மதிப்புள்ள பங்குகள் உட்பட ரூ.810.37 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளுக்கு சொந்தக்காரராக உள்ளார்.

திரு நாயுடுவின் அசையா சொத்துகள், ஹைதராபாத்தின் ‘ஜூபிலி ஹில்ஸ்’ பகுதியில் உள்ள ஒரு வீடு உட்பட ரூ.36.31 கோடி மதிப்புடையவை. அந்த வீட்டுக்கு திரு நாயுடுவும் அவருடைய மகன் நாரா லோகேஷும் உரிமையாளர்களாக உள்ளனர்.

புவனேஸ்வரிக்கு சொந்தமாக ரூ.85.10 கோடி அசையா சொத்துகள் உள்ளன. தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களும் வணிக சொத்துகளும் அவற்றில் அடங்கும்.

14 ஆண்டுகளாக ஆந்திர முதல்வராகப் பதவி வகித்த திரு நாயுடு, 74, மீண்டும் அப்பதவியில் அமரும் முனைப்புடன் உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!