ஏழு நிமிடங்களில் டெல்லி-ஹரியானா: இந்தியாவில் 2026ல் ஏர் டாக்சி சேவை

ஏழு நிமிடங்களில் டெல்லி-ஹரியானா: இந்தியாவில் 2026ல் ஏர் டாக்சி சேவை

1 mins read
0369a03c-a34a-4095-ae65-7989e76cd1d2
இந்தியாவில் வான்வழி டாக்சி விமானச் சேவையானது 2026ல் அறிமுகம் காணவுள்ளது. - படம்: ஊடகம்
multi-img1 of 2

புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமான ‘இன்டர்குளோப் என்டர்பிரைசஸ்’ நிறுவனம் இந்தியாவில் வான்வழி டாக்சி சேவையை 2026ல் பயன்பாட்டுக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் இருந்து ஹரியானாவின் குருகிராமிற்கு முதற்கட்டமாக இயக்கப்படும் வான்வழி டாக்சி சேவையின் வழி 125 கிலோ மீட்டர் தூரத்தை ஏழு நிமிடங்களில் சென்று சேர்ந்து விடலாம்.

இதற்கான கட்டணமாக பயணி ஒருவருக்கு ரூ.2,000 முதல் அதிகபட்சமாக ரூ.3,000 வரை வசூலிக்கப்பட உள்ளது. இந்தச் சேவையை வழங்குவதற்காக இன்டர்குளோப் நிறுவனம் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து கிட்டத்தட்ட 200 ‘மிட்நைட் டிரோன்’ விமானங்களை வாங்க இருக்கிறது. இதேபோன்ற சேவை மும்பை- பெங்களூருக்கு இடையேயும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

குறிப்புச் சொற்கள்