தேர்தல் பணியால் பிரபலமான வாக்குச்சாவடி பெண் அதிகாரி

தேர்தல் பணியால் பிரபலமான வாக்குச்சாவடி பெண் அதிகாரி

1 mins read
bc096e5e-dfb2-4b7d-8a4d-f48810eca2fb
இஷா அரோரோ. - படம்: ஊடகம்

லக்னோ: நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய முதல் கட்டத் தேர்தலின்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் எட்டுத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இவற்றில் சஹாரன்பூர் வாக்குச்சாவடியில் அதிகாரியாகப் பணியாற்றிய இஷா அரோரோ என்ற பெண் இணையத்தில் பிரபலமாகி வருகிறார்.

வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளுக்குச் சென்று இஷா மேற்பார்வையிட்ட காணொளியை சமூக ஊடகங்களில் வலைத்தளவாசிகள் பகிர்ந்துவருகின்றனர். இதனால் அவர் திடீரென இணையத்தில் பிரபலமாகி உள்ளார்.

அம்மாநிலத்தில் உள்ள மஹாங்கிர் கிராமத்தில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரியாகப் பணிபுரிந்து வரும் அவர், “நான் எனது கடமையைச் சரிவர செய்கிறேன். அதனால் பாராட்டப்படுகிறேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்