பிரசாரத்தின் போது பாஜக வேட்பாளரின் கண்ணில் காயம்

பிரசாரத்தின் போது பாஜக வேட்பாளரின் கண்ணில் காயம்

1 mins read
6492e8c4-22d6-4f62-9bc3-81ea62bfdb51
கொல்லம் தொகுதியில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்ட பாஜ வேட்பாளரும், நடிகருமான கிருஷ்ணகுமார்.  - படம்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: பிரசாரத்தின் போது கூர்மையான ஆயுதம் தாக்கியதால் கொல்லம் தொகுதி பாஜ வேட்பாளரும், நடிகருமான கிருஷ்ணகுமாரின் கண்ணில் காயம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரள மாநிலம் கொல்லம் தொகுதியில் பாஜ வேட்பாளராக பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். அவர் நேற்று முன்தினம் கொல்லம் முளவனா பகுதியில் உள்ள சந்தையில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு தொண்டரின் கையில் இருந்த ஒரு கூர்மையான ஆயுதம் கிருஷ்ணகுமாரின் வலது கண்ணில் தாக்கியது. இதில் அவரது கண்ணில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போடப்பட்டது. 2 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஆனால் கிருஷ்ணகுமார் சிறிது நேரம் கழித்து மீண்டும் பிரசாரத்தை தொடங்கினார்.

குறிப்புச் சொற்கள்