திருமண விருந்துண்ட 70 பேர் மருத்துவமனையில்

1 mins read
95ee19b5-724f-4214-950e-06f86ab767f3
உத்தரப் பிரதேசத்தில் திருமணத்தில் சாப்பிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். - படம்: இந்திய ஊடகம்

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 24) நடந்த திருமணத்தில் பங்கேற்று விருந்துண்ட பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாகக் கூறப்பட்டது. உணவு நச்சு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்