தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரசார மேடையில் மயங்கி விழுந்த நிதின் கட்கரி

1 mins read
b2e23273-20b1-4281-95f6-85ed425c1e76
மகாராஷ்டிர மாநிலம் யவத்மாலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 24) பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி, மேடையிலேயே சரிந்து விழுந்தார் - படம்: இந்திய ஊடகம்

மும்பை: மஹாராஷ்டிராவில் யவத்மால் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பாஜக மூத்த தலைவரும், மத்திய இணையமைச்சருமான நிதின் கட்கரி திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பொதுக்கூட்டத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 24) பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி, மேடையிலேயே சரிந்து விழுந்தார். உடனிருந்த தலைவர்கள் அவருக்கு தண்ணீர் தெளித்து மயக்கத்தைத் தெளிவிக்க முயன்றனர். பின்னர் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய அவர், தான் நலமுடன் இருப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார்.

அதிக வெப்பம் காரணமாக தனக்கு மயக்கம் ஏற்பட்டுவிட்டதாகவும், தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பாஜக வேட்பாளராக நாக்பூர் தொகுதியில் நிதின் கட்கரி போட்டியிடுகிறார். இங்கு முதல்கட்ட தேர்தலிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. தற்போது, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனை வேட்பாளர்களை ஆதரித்து அவர் யவத்மாலில் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது அச்சம்பவம் நடந்துள்ளது.

நிதின் கட்கரி 2014 மற்றும் 2019-ல் நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

குறிப்புச் சொற்கள்