தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்ட விரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெருகும் அபாயம்: மத்திய அரசு எச்சரிக்கை

2 mins read
95a32f46-7ac1-41dd-8ae9-f9ba2c5b3128
உறுப்பு தானம் தொடர்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பலநல அமைச்சின் பொது சுகாதாரச் சேவைகளுக்கான இயக்குநரகம் வழிகாட்டி விதிமுறைகளை அனுப்பியுள்ளது.  - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: சட்ட விரோதமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் போக்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இறந்த ஒருவரின் உடல் உறுப்புகளைத் தேவைப்படும் ஒருவருக்கு மாற்றுவதே உறுப்பு தானமாகும். இதுதவிர நெருங்கிய உறவினராக இருக்கும் பட்சத்தில் கருணை அடிப்படையில் உறுப்பு தானம் செய்ய அனுமதி உண்டு.

ஆனால், உறுப்பு தானத்தை வியாபாரமாக செய்வது இந்தியச் சட்டப்படி குற்றமாகும். உறுப்பு தானம் செய்வது, பெறுவது தொடர்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சின் பொது சுகாதாரச் சேவைகளுக்கான இயக்குநகம் வழிகாட்டி விதிமுறைகளை அனுப்பியுள்ளது.

அந்த வழிகாட்டுதலின்படி, சட்ட விரோத உறுப்புமாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதை தடுக்க உறுப்பு தானம் செய்யும் நன்கொடையாளர், பெறுநர் ஆகிய இரு தரப்புக்கும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு அடையாளம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளிநாட்டினர்கள் இந்தியாவுக்கு வருவது அதிகரித்துள்ளது. ஏனெனில் இந்தியாவில் உறுப்புதானத்திற்கு ஆகும் செலவு மிகக்குறைவு. அதேநேரத்தில் வெளிநாட்டினருக்கு செய்யப்படும் மாற்று உறுப்புதான சிகிச்சை இந்தியச் சட்டப்படி செய்யப்படுகிறதா என்பதை இங்குள்ள மருத்துவமனைகள் உறுதிப்படுத்த வேண்டும். வியாபார ரீதியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றால் அது சட்டப்படி குற்றமாகும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விவரங்கள், இதற்காக வரும் வெளிநாட்டினர் பற்றி மாதாந்திர அடிப்படையில் தகவல் சேகரித்து தேசிய உறுப்பு மற்றும் திசுமாற்று அமைப்புடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்