அருணாசலப்பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு

அருணாசலப்பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு

1 mins read
2fc669f5-6aa1-4cdd-9161-f0466f5eea28
தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க மூன்று நாள்கள் ஆகும் என அருணாச்சலப் பிரதேச மாநில அரசு கூறியுள்ளது. - படம்: தினத்தந்தி

இட்டாநகர்: அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திபெங் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ரோயிங் – அனினி தேசிய நெடுஞ்சாலை அடித்துச் செல்லப்பட்டது. இதனால், மற்ற மாவட்டங்களில் இருந்து திபெங் மாவட்டம் துண்டிக்கப்பட்டது.

சாலை துண்டிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளைச் சீரமைக்க மூன்று நாள்கள் எடுக்குமென்பதால் பொதுமக்கள் பயணங்களைத் தவிர்க்குமாறு அம்மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்