தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பரூக் அப்துல்லா: நாட்டை பிளவுபடுத்த பிரதமர் மோடி முயற்சி செய்கிறார்

1 mins read
7dc21ccf-cd56-4046-ba08-b9eec4ed8c9e
ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசி நாட்டைப் பிளவுபடுத்த முயற்சி செய்கிறார் என்று பரூக் அப்துல்லா சாடியுள்ளார். - படம்: ஊடகம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிடுகிறது.

தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர் அகா ருகுல்லா வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாக கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

வியாழக்கிழமை கட்சித் தொண்டர்களிடையே பேசிய பரூக் அப்துல்லா, “முஸ்லிம்களுக்கு எதிராக பிரதமர் மோடி அண்மையில் ராஜஸ்தானில் பேசியது நாட்டையே உலுக்கி உள்ளது.

பிரதமர் என்பவர், நாட்டின் அரசியலமைப்பின் கீழ் அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டும். பிரதமராக வருபவர் அனைவருக்கும் ஒரு தந்தை போன்றவர். அவரது கட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்களின் நிறம், மதம், உணவு அல்லது உடையால் யாரையும் வேறுபடுத்தி பார்க்கக்கூடாது. ஆனால், பிரதமர் மோடி நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார். அவரது பேச்சு ஏமாற்றம் அளிக்கிறது.

இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என அனைவரும் நாட்டின் குடிமக்கள். இந்த சமூகங்களிடையே வேற்றுமையை உருவாக்க முயற்சிப்பதை இந்தியா கூட்டணி எதிர்க்கிறது.

இந்தியாவின் அடையாளத்தையும், ஆபத்தை எதிர்கொண்டுள்ள இந்திய அரசியலமைப்பையும் பாதுகாக்கவே இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று டாக்டர் அம்பேத்கரின் அரசியலமைப்பை பாதுகாக்கும்,” என்று பேசியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்