பெங்களூரு: ரயில் மோதி மூவர் பலி

பெங்களூரு: ரயில் மோதி மூவர் பலி

1 mins read
e1f41d01-21ef-47a0-9aa7-ba1254e0e7d2
யஷ்வந்தப்பூரியில் இருந்து கண்ணூர் நோக்கிச் சென்ற விரைவு ரயில் இளையர்கள் மீது மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: பிக்சாபே

மைசூர்: பெங்களூருவின் சின்னப்பனஹள்ளி அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் தாக்கி மூன்று இளையர்கள் உயிரிழந்தனர்.

மாண்டவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த லோகேஷ் (23), பாலசுப்ரமணியம் (22), சசிகுமார் (20) என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் மூவரும் பெங்களூரு மாரத்தஹள்ளி அருகே உள்ள சின்னப்பனஹள்ளி பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

யஷ்வந்தப்பூரியில் இருந்து கண்ணூர் நோக்கிச் சென்ற விரைவு ரயில் இளையர்கள் மீது மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆடவர்கள் ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்ததாகவும், அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மாண்ட மூவரும் நண்பர்கள் என்றும் அவர்கள் வேலை தேடி பெங்களூருக்கு வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்த விபத்து சம்பவத்தால் மாரத்தஹள்ளி, சின்னப்பனஹள்ளி வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்