மோடி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

மோடி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

1 mins read
889b4ec9-333c-45e3-a841-4d72f3f0ad77
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும், அதனால் அவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என்று கூறி, ஆனந்த் எஸ் ஜோந்தலே என்ற வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

“பிரதமர் மோடி, ஏப்ரல் 9ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் நடந்த பிரசாரத்தில் இந்து, சீக்கிய கடவுள்கள் பெயரால் வாக்கு கேட்டார். முஸ்லிம்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் செயல்படுவதாகவும் விமர்சனம் செய்தார். பிரதமரின் இந்த பேச்சு நாட்டின் ஒற்றுமையை கெடுக்கும்,” என்று ஆனந்த் தமது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடக்கும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. நீதிபதி சச்சின் தத்தா வழக்கு விசாரணை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நீதிபதி தத்தா வேறு சில முக்கிய வேலைகளில் இருந்ததால் இந்த வழக்கை திங்கட்கிழமை (ஏப்ரல் 29) விசாரிப்பார் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்