இந்தியாவுக்கு ஆயுதங்கள் விற்க கட்டுப்பாட்டை தளர்த்தியது ஜெர்மனி

இந்தியாவுக்கு ஆயுதங்கள் விற்க கட்டுப்பாட்டை தளர்த்தியது ஜெர்மனி

1 mins read
d69d497c-9de7-4f8e-9447-a727c0f7f561
இந்திய ராணுவ வீரர்கள் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி பொக்ரான் பகுதியில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டனர். - கோப்புப்படம்: ஏஎப்பி

புதுடெல்லி: சிறிய வகை ஆயுதங்கள் மற்றும் ஆயுத உதிரிப் பாகங்களை நேட்டோ அணியில் இல்லாத நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு ஜெர்மனி கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அவ்வகையில், நேட்டோ அணியில் இல்லை என்பதால் இந்தியாவால் ஜெர்மனியிடம் இருந்து சிறிய ரக ஆயுதங்களை வாங்க முடியாமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது ஜெர்மனி அரசு இந்தியாவுக்கான ஆயுத விற்பனைக் கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளதாகவும் இதன் பகுதியாக அண்மையில் இந்திய தேசிய பாதுகாப்புப் படைக்குத் தேவையான துப்பாக்கி உதிரி பாகங்களை வழங்க ஜெர்மனி அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக கொண்டிருந்த கட்டுப்பாட்டை ஜெர்மனி தளர்த்தி வருகிறது.

இது தவிர்த்து இந்தியாவுடன் இணைந்து ஆயுத உதிரிப் பாகங்கள் தயாரிப்பது குறித்தும் ஜெர்மனி ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்