2030க்குள் உலகின் மூன்றாவது பெரிய மின் வணிகச் சந்தையாக இந்தியா

2030க்குள் உலகின் மூன்றாவது பெரிய மின் வணிகச் சந்தையாக இந்தியா

1 mins read
8530692e-546f-421a-8e81-bf1c2be9378d
881 மில்லியன் பயனாளர்களுடன் உலகின் இரண்டாவது பெரிய இணையப் பயனாளர் சந்தையை இந்தியா கொண்டிருக்கிறது. - படம்: பிக்சாபே

புதுடெல்லி: இந்தியாவின் மின் வணிகச் சந்தைக்கு வளமான எதிர்காலம் இருப்பதாகக் கூறியுள்ள ‘இன்வெஸ்ட் இந்தியா’ அமைப்பு, 2030க்குள் அது $325 பில்லியன் மதிப்புக்கு வளரும் என கணித்துள்ளது.

தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு, ஒருங்கிணைப்பு அமைப்பான ‘இன்வெஸ்ட்’ இந்தியா’வை பொறுத்தமட்டில், 881 மில்லியன் பயனாளர்களுடன் உலகின் இரண்டாவது பெரிய இணையப் பயனாளர் சந்தையை இந்தியா கொண்டிருக்கிறது.

இதன் அடிப்படையில், 2030க்குள் உலகின் மூன்றாவது பெரிய மின் வணிகச் சந்தையாக இந்தியா உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அசுர வளர்ச்சிக்குப் பல்வேறு அம்சங்கள் காரணங்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவில் இணையப் பயன்பாடு அதிகரித்து வருவதை ‘இன்வெஸ்ட்’ இந்தியா’ கோடிக்காட்டியது. 2025க்குள் 87% இந்தியக் குடும்பங்களிடம் இணையப் பயன்பாடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, கைப்பேசிகளில் இணையப் பயன்பாடு வலுவாக உள்ளது. அச்சாதனங்களில் இணையத்தைப் பயன்படுத்தும் நேரமும் அதிகரித்துள்ளது.

இணைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என முன்னுரைக்கப்படுகிறது. கிராமப்புற, நகர்ப்புறப் பகுதிகள் இரண்டிலும் வளர்ச்சி விகிதம் வலுவாக உள்ளது.

இந்தியாவில் தரவுத் திட்டங்கள் விலைக் கட்டுப்படியாக இருப்பதும் மின் வணிக வளர்ச்சிக்கு முக்கியக் காரணம்.

திறன்பேசிப் பயனாளர்கள் அதிகரிப்பு, மின்னிலக்கப் பரிவர்த்தனைகளில் ‘யுபிஐ’யின் ஆதிக்கம், உள்ளூர் மொழிகளில் உட்பொருள் கிடைப்பதும் இதர காரணங்கள்.

ஒட்டுமொத்தமாக ‘இன்வெஸ்ட் இந்தியா’வின் அறிக்கை, 2030க்குள் உலகளாவிய மின் வணிகச் சந்தையாவதற்கு இந்தியாவின் உருமாற்றத்தை வெளிப்படையாகக் காட்டுகிறது.

குறிப்புச் சொற்கள்