ஒடிசா மக்களின் செல்வத்தை பாஜக கொள்ளை அடித்துள்ளது: ராகுல் காந்தி

கட்டாக்: இந்தியாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் கோடிக்கணக்கான செல்வந்தர்கள் உருவாக்கப்படுவார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் கட்டக்கில் ஞாயிற்றுக்கிழை நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் இக்கருத்தை ராகுல் தெரிவித்தார்.

“ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக் இருந்தாலும் அவரின் உதவியாளா் வி.கே.பாண்டியனே மாநிலத்தில் அரசாட்சி செய்கிறார். ஒடிசா மக்களின் செல்வத்தை நவீன் பட்நாயக், பாண்டியன், நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர் கொள்ளையடித்துள்ளனர்,” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

ஒடிசாவில் சுரங்க ஊழல் மூலம் ரூ.9 லட்சம் கோடி, நில அபகரிப்பு மூலம் ரூ.20,000 கோடி, தோட்டக்கலை ஊழல் மூலம் ரூ.15,000 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மத்தியிலும் ஒடிசாவிலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மக்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று ராகுல் காந்தி கூறினார்.

“பிரதமா் மோடி 22 பெரும் கோடீஸ்வரா்களுக்காக ஆட்சி நடத்துகிறாா். பழங்குடியினரை ‘காட்டுவாசிகள்’ என்று பாஜகவினா் அழைக்கின்றனா். அவா்கள் ‘காட்டுவாசிகள்’ அல்ல. நீா், நிலம் மற்றும் காட்டின் மீது முதல் உரிமை கொண்ட ‘ஆதிவாசிகள்’. அவா்களின் உரிமைகளை பிரதமா் மோடி பறித்து தொழில்துறையினரிடம் வழங்கியுள்ளாா். அந்த உரிமைகள் பழங்குடியினருக்கு காங்கிரஸ் திருப்பி அளிக்கும்,” என்று ராகுல் காந்தி பிரசாரத்தில் பேசினார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!