தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இறுதிகட்டத்தில் கட்சி மாறிய வேட்பாளர்

1 mins read
23945b4f-0cb3-4ce3-aba8-e20921a9cf1f
பாஜக வேட்பாளருடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அக்ஷய் காண்டி வேட்பு மனுவை திரும்பப் பெற்றார். - படம்: சமூக ஊடகம்

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி பம் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்தார்.

பாஜக வேட்பாளருடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அக்ஷய் காண்டி வேட்பு மனுவை திரும்பப் பெற்றார்.

வாக்குப்பதிவிற்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வேட்பு மனுவை காங்கிரஸ் வேட்பாளர் திரும்பப் பெற்றுள்ளார்.

ஏற்கனவே சூரத்தில், அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனுவை திரும்பப் பெற்றதால் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வானார்.

தற்போது இந்தூர் தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் மனுவை திரும்பப் பெற்றதால், பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகும் சூழல் உருவாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்