லக்னோ: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விடும் என்று டிம்பிள் யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். உ.பி.யின் மெயின்புரி மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார்.
செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ், “மக்களைப் பாதிக்கும் உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்ப பிரிவினை அரசியலை பாஜக கடைப்பிடிப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
பொய் பேசுவதில் பாஜகவினர் திறமையானவர்கள் என்பதை புரிந்த மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் . பாஜக வென்றால் இந்தியா 15 ஆண்டு பின்னோக்கி செல்லும். நாட்டின் அரசியல் சட்டத்துக்கு பாஜக ஆட்சியில் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. இந்தத் தேர்தல் இந்தியாவின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான தேர்தலாகும்.
எனவே, இம்முறை மக்கள் மாற்றத்துக்காக வாக்களிக்கப் போகிறார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.