டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

1 mins read
ef5b8777-2fb6-4f69-9aa7-f18e8bb36046
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய டெல்லி காவல்துறையினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலும் அதைச் சுற்றியுள்ள வட்டாரத்திலும் இருக்கும் பல பள்ளிகளுக்கு மே 1ஆம் தேதி காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மாணவர்கள் வீடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய காவல்துறையினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

மோப்ப நாய்களைப் பயன்படுத்தி பள்ளிகள் சோதனையிடப்படுகின்றன.

வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக டெல்லி காவல்துறை கூறியது.

குறிப்புச் சொற்கள்