டெல்லி, நொய்டாவில் 100க்கு மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லி, நொய்டா ஆகிய நகர்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளதால் அங்குள்ள பள்ளிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான பள்ளிகளில் பாதுகாப்பு கருதி மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், மின்னஞ்சல் வந்த கணினியின் ஐபி முகவரி இந்தியாவுக்கு வெளியே இருந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.

விபிஎன் மூலமாக ஐபி முகவரியை மறைக்கலாம் என்று டெல்லி காவல்துறை சந்தேகிக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே, “மக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம். இது ஒரு புரளி என்பதாகவே தோன்றுகிறது. டெல்லி காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் நெறிமுறைப்படி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்,” என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து துவாரகா டிஜிபி, “பல்வேறு குழுக்கள் சோதனை நடத்தி வருகின்றன. சந்தேகத்துக்கிடமான வகையில் எந்தப் பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. மின்னஞ்சல் வந்த ஐபி முகவரி குறித்து விசாரணை நடந்து வருகிறது. புதன்கிழமை காலையில் மின்னஞ்சல் வந்தது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக செவ்வாய்க்கிழமையன்றும் டெல்லி, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், தமிழகத்தின் சென்னை ஆகிய நகரங்களில் உள்ள பல பள்ளிகளுக்கு இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததாகத் தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் மே 1ஆம் தேதி காலையில் குறிப்பாக டெல்லி, நொய்டா ஆகிய நகரங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மிரட்டல் மின்னஞ்சல் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு வெடிக்கப்போவதாக அச்சுறுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் நாடு முழுவதும் உள்ள 30க்கு மேற்பட்ட விமான நிலையங்களுக்கு அதே பாணியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஓசூர் மாருதி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள். டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் வெடிகுண்டு மிரட்டல் காாரணமாக நோயாளிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்தது யார் என்பது குறித்து காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் ஆர்கே புரத்தில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததது. அங்கு காவல்துறை நடத்திய சோதனையில் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!