அனந்த்நாக் - ராஜோரி தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு

அனந்த்நாக் - ராஜோரி தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு

1 mins read
05abc7a7-7062-4c01-9fb6-53cf685679b4
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதியில் மே 7ஆம் தேதிக்கு பதிலாக மே 25ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  - கோப்புப்படம்: ஊடகம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் - ரஜோரி மக்களவைத் தொகுதிக்கு மே 7ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியது.

அதேவேளையில் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் தேர்தலை ஒத்திவைக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் அனந்த்நாக் - ரஜோரி மக்களவைத் தொகுதியில் மே 7ஆம் தேதிக்கு பதிலாக மே 25ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் மியான் அல்தாப் மற்றும் முன்னாள் முதல் அமைச்சர் மெகபூபா முப்தி உள்பட 21 வேட்பாளர்கள் இந்தத் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்