சட்டமன்றத் தேர்தலில் சோரனின் மனைவி; மக்களவைத் தேர்தலில் சோரனின் சகோதரி போட்டி

1 mins read
87f57615-b486-447f-a54b-a159dc761bc1
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் அம்மாநிலத்தின் காண்டே சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட அஞ்சனி 11.78 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை ஜனவரி 31ஆம் தேதி இரவு கைது செய்தது. அதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் தீவிர விசுவாசியான சம்பாய் சோரன் பதவியேற்றார்.

குறிப்புச் சொற்கள்