மோடி படம் நீக்கப்பட்டது குறித்து அமைச்சு விளக்கம்

மோடி படம் நீக்கப்பட்டது குறித்து அமைச்சு விளக்கம்

1 mins read
2d5e191d-64d5-4a28-909d-f680c66517a8
இந்தியாவின் கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் படம் நீக்கப்பட்டதற்கு மத்திய சுகாதார அமைச்சு விளக்கம் கொடுத்துள்ளது. - கோப்புப்படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழ்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கம் குறித்து பேசிய சுகாதார அமைச்சின் அதிகாரிகள், “மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தடுப்பூசிச் சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

“கொவிட்-19 தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து மோடியின் புகைப்படம் நீக்கப்படுவது இது முதல் முறை அல்ல. 2022ஆம் ஆண்டில், நடந்த உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்களின்போதும் பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது,” என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, கொவி ஷீல்டு கொரோனா தடுப்பூசி யால் பக்க விளைவுகள் ஏற்படும் விவகாரத்தில், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை மத்திய பாஜக அரசு பின்பற்றவில்லை என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், கொவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு மாரடைப்பு போன்ற காரணங் களால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்