பிரியங்கா: அர்ப்பணிப்பு மிக்கவர் அமேதி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்

புதுடெல்லி: “அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்குப் பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு மிக்கவர்,” என்று அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி லால் சர்மா குறித்து பிரியங்கா காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்தது. ரேபரேலி வேட்பாளராக ராகுல் காந்தியும், அமேதி வேட்பாளராக கே.எல்.சர்மாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

காந்தி - நேரு குடும்பத்தின் கோட்டையான ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் வெற்றிக்குப் பின்புலமாக இந்த கிஷோரி லால் சர்மா இருந்ததாக நம்பப்படுகிறது.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரியங்கா வெளியிட்டுள்ள பதிவில், “கிஷோரி லால் சர்மாவுடன் எங்கள் குடும்பத்துக்கு நீண்ட கால உறவு உண்டு. அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்குப் பணியாற்றுவதில் அவர் அர்ப்பணிப்பு மிக்கவர். பொதுச் சேவை செய்வதில் அவருக்கு உள்ள ஆர்வமே இதற்கு ஓர் உதாரணம்”

“கிஷோரி லாலின் விசுவாசமும் பணியின் மீது அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பும் இந்தத் தேர்தலில் அவருக்கு வெற்றியைத் தேடித் தரும். அவருக்கு அநேக வாழ்த்துகள்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை எதிர்த்து அமேதியில் கிஷோரி லால் சர்மா போட்டியிடுகிறார். காங்கிரசின் கோட்டையான அமேதியில் கடந்த 2004ஆம் ஆண்டு ராகுல் காந்தி வெற்றி பெற்ற நிலையில், 2019-ம் ஆண்டு தேர்தலில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் ஏப்.19ஆம் தேதி தொடங்கியது. இரண்டு கட்ட வாக்குப் பதிவுகள் முடிந்திருக்கும் நிலையில், மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதி நடக்க இருக்கிறது. அமேதி மற்றும் ரேபரேலியில் மே 20ஆம் தேதி ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!