தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலகச் சாதனை விருது

1 mins read
c88f2e2c-6263-4bb8-b66f-2f5f3f9f31e8
விஜயகாந்த் நினைவிடத்தில் பிரார்த்தனை செய்யும் பிரேமலதா விஜயகாந்த். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில், பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாக ‘லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது நினைவிடத்தில் தினமும் சிறப்புப் பூசை நடைபெற்று வருகிறது.

விஜயகாந்தின் நினைவிடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாக விஜயகாந்தின் நினைவுச்சின்னம் போற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்