அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதியில் 16 வேட்பாளர்கள் விலகல்

காந்திநகர்: குஜராத்தின் காந்தி நகர்த் தொகுதியில் அமித்ஷா போட்டியிடுகிறார். அதையடுத்து அந்தத் தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இதில் சுயேச்சை வேட்பாளர் ஜிதேந்திர சவுகான் என்பவர், அமித்ஷாவின் அடியாட்கள் தம்மைக் கடத்திச் சென்று மிரட்டினர். அதனால்தான் நான் போட்டியில் இருந்து விலகுகிறேன் என்று ‘ஸ்கேரால்’ இதழுக்குப் போட்டியளித்துள்ளார்.

ஜிதேந்திர சவுகான் உட்பட 3 வேட்பாளர்கள் மிரட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ள ‘ஸ்க்ரோல்’ இதழ் வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் இதுவரை 16 பேர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாகவும் அதில் சுயேச்சைகள் தவிர நான்கு பேர் அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

ஜிதேந்திர சவுகான் தவிர ஒருசிலர் மட்டுமே தாங்கள் பாஜக மற்றும் காவல்துறையினரால் மிரட்டப்பட்டதாக கூறியுள்ள நிலையில் பெரும்பாலான சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் கூட்டங்களுக்கு செலவு செய்ய தங்களிடம் பணமில்லை என்று கூறியுள்ளனர்.

போட்டியில் இருந்து விலக தனக்கு பணம் வழங்குவதாக காவல்துறை உதவியுடன் பாஜக-வினர் தன்னை மிரட்டியபோதும் தனது குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து பணம் எதுவும் வாங்காமல் போட்டியில் இருந்து விலகியதாக ஜிதேந்திர சவுகான் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சூரத் தொகுதியில் வேட்பாளர்கள் அனைவரும் போட்டியில் இருந்து விலகியதை அடுத்து அந்த தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

1989 முதல் பாஜக-வின் கோட்டையாக இருக்கும் காந்தி நகர் தொகுதியில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 5.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமித்ஷா வெற்றிபெற்ற போதும் மே 7ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலில் இருந்து 16 பேர் விலகியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுகிறது. காங்கிரஸ் 24 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான ஆம்ஆத்மி 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!