பள்ளிக்குத் தாமதமாக வந்ததால் ஆசிரியருடன் சண்டையிட்ட பள்ளி முதல்வர்

லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் பள்ளிக்கு தாமதமாக வந்ததாகக் கூறப்படும் சம்பவம் ஒன்றில் ஆசிரியர் ஒருவரை அப்பள்ளி முதல்வர் அடிப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.

கஞ்சன் சௌத்ரி எனும் அந்த ஆசிரியரை அடித்தது மட்டுமல்லாமல், சண்டையில் தமது உடையை அவர் கிழிக்க முற்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த ஆசிரியரின் குர்தாவைப் பிடித்து அப்பள்ளி முதல்வர் அடிப்பதைக் காணொளியில் பார்க்க முடிந்தது. தொடக்கத்தில் அவர்களைச் சண்டையிலிருந்து விலக்கிவிட முற்பட்ட அப்பள்ளி முதல்வரின் வாகன ஓட்டுநர், பின்னர் அந்த ஆசிரியருடன் சண்டையிட்டார்.

காணொளியில் பின்னணியில் பேசிய ஒருவர், “இது படமெடுக்கப்படும். மேடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறீர். இது உங்களுக்கு ஏற்ற நடப்பா?,” என்று கூறுவதைக் கேட்க முடிந்தது.

சண்டையின்போது அப்பள்ளி முதல்வரும் ஆசிரியரும் ஒருவரை ஒருவர் தகாத சொற்களால் திட்டினர்.

“உனக்கு தைரியம் இருந்தால் என்னை அடி. உன்னாலும் உன் ஓட்டுநராலும் என்ன செய்ய முடியும்?” என்று அந்த ஆசிரியர் கூறுவதைக் கேட்க முடிந்தது.

இச்சம்பவத்தில் அந்த ஆசிரியருக்குக் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அவருக்கு எதிராக அப்பள்ளி முதல்வர் காவல்துறையிடம் புகார் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இருவரின் சண்டையைக் காட்டும் அந்தக் காணொளி 4,000க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!