மணிப்பூர் விவகாரத்தில் கவலையற்ற மோடி அரசு: மல்லிகார்ஜுன கார்கே

மணிப்பூர் விவகாரத்தில் கவலையற்ற மோடி அரசு: மல்லிகார்ஜுன கார்கே

1 mins read
e717b05b-d89b-41a3-a719-6e072efb20bb
மணிப்பூரில் வன்முறைச் சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைவதையொட்டி, அந்த வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய அரசு நடவடிக்கை என்று வலியுறுத்தியும் மணிப்பூரின் பழங்குடியின மக்கள் டெல்லியில் ஜலந்தர் மந்தரில் ஒன்று கூடி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஏஎப்பி - படம்: ஏஎப்பி

புதுடெல்லி: “மணிப்பூரில் மனிதநேயம் அழிந்துபோய் விட்டது. அக்கறையற்ற மோடி அரசும் திறமையற்ற மாநில பாஜக அரசும் இணைந்து மாநிலத்தை இரண்டாகப் பிரித்துவிட்டன. அதற்காக துளியும் வருந்தாத பிரதமர் மோடி மணிப்பூரில் காலடி எடுத்து வைக்கவில்லை. அவரது ஆணவம் ஓர் அழகான மாநிலத்தின் சமூகக் கட்டமைப்பை சிதைத்துவிட்டது. பாஜக எப்படி தங்கள் வாழ்க்கையைத் துயரமாக மாற்றியது என்பதை மணிப்பூர் மக்கள் அறிவர்,” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மணிப்பூரில் அவர்கள் அழித்த எண்ணற்ற உயிர்களுக்காக பிரதமர் மோடியும் அவரது அரசும் சிறிதும் பரிவு காட்டவில்லை என்பதை இந்திய மக்கள் இப்போது உணர்வார்கள்.

மணிப்பூரில் கொடூரமான வன்முறைகள் அரங்கேற்றப்பட்டன. ஆனால் பிரதமர் மோடி மௌனம் காத்தார். துயரச் சம்பவங்களுக்கு பிறகுதான் ஆகஸ்ட் 2023ல் உதட்டளவில் கவலை தெரிவித்தார். அது இப்போது எதிரொலிக்கிறது. இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

மணிப்பூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் புதுடெல்லியில் மே 4ஆம் தேதி அமைதியான முறையில் அணிவகுத்துச் சென்றனர். மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் நடந்த ஆயுதமேந்திய குழுக்களுக்கு இடையே நடந்த வன்முறைச் சம்பவங்களில் குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டனர்..

குறிப்புச் சொற்கள்