சித்தராமையா: ரேவண்ணா எந்த நாட்டில் இருந்தாலும் கைதுசெய்வோம்

சித்தராமையா: ரேவண்ணா எந்த நாட்டில் இருந்தாலும் கைதுசெய்வோம்

1 mins read
6f2d71c1-475e-4716-8904-1f0456bb9379
பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட ரேவண்ணா தேர்தல் முடிந்ததும் ஜெர்மனி சென்று விட்டார்.  - படம்: ஊடகம்
Google News Preferred Icon

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரஜ்வல் ரேவண்ணா உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடித்துக் கைது செய்வோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட ரேவண்ணா தேர்தல் முடிந்ததும் ஜெர்மனி சென்று விட்டார். அவரைக் கைது செய்ய சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அவரை தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய முதல்வர் சித்தராமையா, “ரேவண்ணா எந்த நாட்டில் இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம். மேலும் அவருடைய கடப்பிதழை ரத்து செய்யுமாறு பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். அவர் மீது கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா கூறினார்.

குறிப்புச் சொற்கள்