தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈரான்: சிறைபிடிக்கப்பட்ட இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான்

1 mins read
17657a68-1e2b-4071-8e4e-8ea57e5e3b30
ஈரானால் சிறை பிடிக்கப்பட்ட எம்எஸ்சி ஏரீஸ் கப்பல் மாலுமிகளில் ஒருவரான கேரளாவைச் சேர்ந்த ஆன் தெஸ்ஸா ஜோசப் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி விடுவிக்கப்பட்டு இந்தியா வந்து சேர்ந்தார். - படம்: @MEAIndia

டெஹ்ரான்: ஹாா்முஸ் நீரிணையையொட்டிய கடற்பகுதியில் ஈரான் புரட்சிப் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ‘எம்எஸ்சி ஏரீஸ்’ சரக்குக் கப்பலில் சிக்கியிருந்த 16 இந்தியா்கள் உள்பட அனைத்து மாலுமிகளும் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

இஸ்ரேலுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையாக ஈரான் நடத்திய இந்தச் சிறைபிடிப்பு சம்பவத்தில் ஏற்கெனவே ஒரு இந்தியப் பெண் மாலுமி விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், சுமாா் 20 நாள்களுக்குப் பிறகு மற்ற 24 மாலுமிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

இஸ்ரேலியருக்குச் சொந்தமான ‘எம்எஸ்சி ஏரீஸ்’ சரக்குக் கப்பலை ஈரான் புரட்சிப் படையினா் கடந்த மாதம் 13ஆம் அதிரடியாகச் சிறைபிடித்தனா். இந்தக் கப்பலில் 17 இந்தியா்கள் உள்பட 25 மாலுமிகள் பணியில் இருந்தனா்.

இந்த நிலையில், 16 இந்தியா்கள் உள்பட கப்பலில் பணியிலிருந்த 24 மாலுமிகளும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனா். ஆனால், கப்பலை மட்டும் ஈரான் விடுவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்