3வது கட்டத் தேர்தல்; களத்தில் முக்கிய பிரமுகர்கள்

புதுடெல்லி: மக்களவை 3வது கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு குஜராத், கா்நாடகம் உட்பட 12 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளில் மே 7ஆம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இதையொட்டி மே 5ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பிரசாரம் ஓய்ந்தது.

18வது மக்களவைக்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இரு கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ளன.

முதல் கட்டமாக, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியும் தோ்தல் நடைபெற்றது.

3வது கட்டமாக, அசாம், பீகார், சட்டீஸ்கர், கோவா, குஜராத், கா்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் தாத்ரா-நகா்ஹவேலி மற்றும் டாமன்-டையூ, ஜம்மு-காஷ்மீா் ஆகிய யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை மே 7ல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

குஜராத்தில் மொத்தம் 26 தொகுதிகள் உள்ள நிலையில் சூரத் தொகுதி பாஜக வேட்பாளா் முகேஷ்குமாா் சந்திரகாந்த் போட்டியின்றி தோ்வானாா். எஞ்சிய 25 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது.

கா்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் ஏற்கெனவே 14 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. மீதமுள்ள 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இரண்டு மாநிலங்களிலும் தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடைந்தது.

3வது கட்டத் தேர்தலில் பல முக்கிய பிரமுகர்கள் அரசியல்வாதிகள் போட்டியிடுகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா (காந்திநகா்), மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா (குணா), சமாஜ்வாதி தலைவா் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் (மெயின்புரி), மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் (விதிஷா), தேசியவாத காங்கிரஸ் நிறுவனா் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே (பாரமதி) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாக களத்தில் உள்ளனர்.

இதற்கிடையே வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி மே 14ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என இந்திய ஊடகங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தொகுதிக்கு இறுதிகட்ட தேர்தலின்போது ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராயும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அதர் ஜமால் லரியும் களம் காண்கின்றனர்.

மக்களவை ஏழு கட்டத் தோ்தல்களிலும் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!