தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெவ்வேறு கட்சிகளின் சார்பில் போட்டி

1 mins read
f52a486f-d9ae-41df-a8b1-04ce1bdba15a
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் ஒரே தொகுதியில் வெவ்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிடுவதாக தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. - படம்: இந்திய ஊடகம்

புவனேஸ்வர்: ஒடிசாவின் குனுபூர் தொகுதியில் ஒரே குடுமத்தைச் சேர்ந்த மூவர் வெவ்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிடுகின்றனர். இம்மூவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கடும்போட்டி தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ளது.

ஒடிசாவின் குனுபூர் சட்டப்பேரவை தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ ரகுநாத் கமங். இவர் மே 13ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அவரது பேரன் சத்யஜித் கமங் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

அதேபோன்று, இவர்கள் இருவரையும் எதிர்த்து பாஜக சார்பில் சத்தியஜித்தின் மருமகன் திரிநாத் கமங் போட்டியிடுகிறார். நவீன் பட்நாயக் அரசு மேற்கொண்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முன்னிறுத்தி பிஜேடி வேட்பாளர் ரகுநாத் கமங் வாக்கு சேகரித்து வருகிறார். பாஜக வேட்பாளர் திரிநாத், பிரதமரின் மேம்பாட்டு பணிகளை சுட்டிக்காட்டி வாக்குகளை வேட்டையாடி வருகிறார்.

தேர்ந்தெடுத்தால், சுகாதார வசதி மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை நிறுவுவதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பேன் என காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சத்யஜித் பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்