வாரணாசி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து 3வது முறையாக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் இறுதிக்கட்ட தேர்தல் நாளான ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மே 14ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு முந்தைய நாளான மே 13ஆம்தேதி அவர் வாரணாசியில் வாகன பேரணி நடத்துகிறார். பேரணி செல்லும் பாதை இறுதி செய்யப்பட்டு விட்டது. பேரணி செல்லும் பாதை இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் வாரணாசி நகர பாஜக தலைவர் வித்யாசாகர் ராய் தெரிவித்தார்.