ஆபாச காணொளி விவகாரம்: அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறிய பல பெண்கள்

2 mins read
61476488-d8b8-4ae4-bdca-5a3b2e69ebf8
பிரஜ்வல் ரேவண்ணா. - படம்: இந்திய ஊடகம்

பெங்களூர்: இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான ஆபாசக் காணொளிகள் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக கர்நாடகாவின் ஹாசன் வட்டாரத்தில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.ஹாசன் தொகுதியின் எம்.பி.யாக உள்ள தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால், மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஏப்ரல் 26ஆம் தேதி ஹாசனில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் பிரஜ்வல் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், ஒரு பெண் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், பிரஜ்வால் ரேவண்ணாவின் தந்தையும் ஹோலேநரசிபூர் எம்எல்ஏவுமான எச் டி ரேவண்ணாவை சிறப்புப் புலனாய்வுக் குழுவு  சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

“ஹாசன் வட்டாரம் முழுவதும் எச்.டி ரேவண்ணாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. நீங்கள் அவர்களைப் பற்றி தவறாகப் பேசுகிறீர்கள் என்றால், அது அவர்களைச் சென்றடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் குடும்பம் மற்றும் கட்சிக்கு ஏராளமான விசுவாசிகள் உள்ளனர், ”என்று ஹாசன் நகரத்திலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள ஹகரே கிராமத்தில் உள்ள ஒரு கடைக்காரர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறினார்.

ரேவண்ணாவின் வீட்டில் வேலை பார்த்த ஒரு பெண்ணின் புகாரின் அடிப்படையில் ஏப்ரல் 28ஆம் தேதி பிரஜ்வலுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 

“அந்தப் பெண்ணின் சில காணொளிகள் பரவத் தொடங்கின, அதன் பிறகு, அவரது வீடு பூட்டியிருந்தது. அந்தப் பெண் எப்போது சென்றாள் என்பது எங்களுக்குத் தெரியாது,” என்று கிராமவாசி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரசிடம் கூறினார்.

“பல கட்சிப் பெண்கள் சமூக ஊடகங்களில் பிரஜ்வலுடன் தாங்கள் இருந்த புகைப்படங்களை நீக்குவதை நாங்கள் கவனித்தோம். சில சமயங்களில், எம்.பி.யுடன் உள்ள தொடர்பு குறித்து, ஆண்கள் தங்கள் மனைவிகளிடம் கேள்வி கேட்கின்றனர்.  இந்த சம்பவம் அவ்வட்டாரத்தில் பல பெண்களின் வாழ்க்கையை சிதைத்து வருகிறது,’‘ என்று உள்ளூர் மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

பெண்களின் அடையாளங்களை வெளிப்படுத்தும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியதால் பல குடும்பங்கள் ஹாசனை விட்டு வெளியேறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்