தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசியல் வாரிசை நீக்கிய மாயாவதி

1 mins read
39798b38-e09d-49c5-b9d3-858916fe5e3a
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி. - படம்: ஊடகம்

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடந்த ஆண்டு இறுதியில் தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாகவும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்பப்பெற்றுக் கொள்வதாக மாயாவதி அறிவித்து உள்ளார்.

ஆகாஷ் ‘அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையும் வரை’ கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் மாயாவதி தெரிவித்துள்ளார்.

“ஆகாஷ் கடந்த 12 மாதங்களாக  கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் மாயாவதியை விடவும் ஆகாஷ் ஆனந்தின் பங்கு அதிகமாக இருந்த்தது. திடீரென பொறுப்புகளில் இருந்து ஆகாஷ் நீக்கப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்