தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஹூண்டாய்’ கார் வழங்காததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்

1 mins read
c343e662-b23e-4e91-8238-2832d2cc8493
மணமகன் மீது காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். - படம்: பிக்சாபே

லக்னோ: தான் சீதனமாக கேட்ட காருக்கு பதிலாக வேறு காரை வழங்கியதால் மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் முசாபர் நகரை சேர்ந்தவர் அமீர் ஆலம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.

அமீர் தனக்கு வரதட்சணையாக ஹூண்டாய் காரை கேட்டிருந்தார். ஆனால் மணமகளின் குடும்பத்தினர் அவருக்கு மாருதி காரை சீதனமாக அளித்துள்ளனர். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அமீர் திருமணத்தை நிறுத்தினார்.

திருமணம் பாதியில் நின்றதை அறிந்து மணப்பெண் தனது நிலை குறித்தும், குடும்பத்தினரின் துயரம் குறித்தும் சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டார்.

இதுபோன்று நடந்துகொள்ளும் ஆண்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் மணமகன் மீது காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்