அனுமரை நீதிமன்றத்துக்கு இழுத்தவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

அனுமரை நீதிமன்றத்துக்கு இழுத்தவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

1 mins read
0555906e-40ad-4fcd-bb1b-0bbfd6818b52
டெல்லி உயர் நீதிமன்றம் - படம்: இணையம்
Google News Preferred Icon

புதுடெல்லி: தனியார் நிலத்தில் உள்ள கோவில் தொடர்பான வழக்கில் ஆஞ்சநேயரையும் மனுதாரராக சேர்த்தவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உள்ளது.

டடெல்லி உத்தம் நகர் பகுதியில், தனியார் நிலத்தில் கட்டப்பட்ட கோவில் தொடர்பாக வழக்கைத் தொடர்ந்த அங்கித் மிஸ்ரா, 31, கோவில் பொது மக்களுக்குச் சொந்தமானது என்பதால், இந்த நிலம் ஆஞ்சநேயருக்கு சொந்தமானது எனக்கூறி, ஆஞ்சநேயரையும் ஒரு மனுதாரராக சேர்த்து இருந்தார்.

சுராஜ் மாலிக் என்பவர் கட்டிய அந்தக் கோயில் பொது வழிபாட்டிடமாக இருப்பதால், மாலிக்கின் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம்,கோவிலுக்குள் அவ்வப்போது பொதுமக்களை அனுமதிப்பது அதன் தனிப்பட்ட தன்மையை மாற்றாது என்று நீதிமன்றம் கூறியது.

மனுதாரரின் இந்தச் செயல், சட்ட நடவடிக்கையை துஷ்பிரயோகம் செய்யக்கூடியது.மோசமான, தீங்கு விளைவிக்கும் நடைமுறை எனக்கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்
உயர் நீதிமன்றம்புதுடெல்லிகோயில்வழக்கு