ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா புதன்கிழமை கடப்பாவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
கடப்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஷர்மிளா, தம்மை எதிர்த்துப் போட்டியிடும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அவினாஷ் ரெட்டிக்குத் தேர்தல் பயம் வந்து விட்டது. அதனால்தான் அவர் பாஸ்போர்ட் எல்லாம் தயாராக வைத்துள்ளார்.
தேர்தலில் தோற்றதும் வெளிநாட்டுக்கு அவர் தப்பிச் செல்லக்கூடும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை அவர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஒரு குற்றவாளிக்கு மக்கள் வாக்களித்திருப்பதாகவே அர்த்தம் என்று கூறியுள்ளார்.
கடப்பாவில் அவினாஷ் ரெட்டி ‘சிங்கிள் பிளேயர்’ என ஜெகன்மோகன் ரெட்டியின் மனைவி பாரதி ரெட்டி கூறுகிறார். இவர்களுக்கு தாங்கள் மட்டுமே ஆட்சி நடத்த வேண்டும், எதிர்த்துப் பேசுவோர் யாராக இருந்தாலும் அவர்களை வெட்டிச் சாய்த்திட வேண்டும்.
ஆந்திர மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளாக துரோகம் இழைத்துள்ளார். ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள ஒரு வாக்குறுதியைக் கூட அவர் நிறைவேற்றவில்லை என்று கூறியுள்ளார்.
இதுதான் பாரதியின் திட்டம் போலும். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திர மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளார். ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள ஒரு வாக்குறுதியை கூட அவர் நிறைவேற்றவில்லை.
இதற்காக அவர் ஆந்திர மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆந்திர மக்களின் மனதின் குரலை கேட்க அவருக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு வானொலிப் பெட்டியைப் பரிசாக அனுப்புகிறேன் என்று ஷர்மிளா பேசினார்.