பாட்னா: இவ்வாண்டு நீட் தேர்வின் போது ராஜஸ்தான், டெல்லி, பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது கண்டு பிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்த சிக்கந்தர் யாகவேந்து (வயது 56) என்பவரை காவல் துறை கைது செய்தது.
மேலும் தேர்வுக்கு ஒருநாள் முன்பே கிட்டத்தட்ட 20 மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக 4 மாணவர்களும், அவர்களது பெற்றோர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

