தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2 மில்லியன் கைப்பேசி இணைப்புகளை முடக்க உத்தரவு

1 mins read
2fa19e22-3b9a-466f-b965-181cbc7cb7ba
28,000க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் இணையக் குற்றங்களை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டதாகக்  கண்டுபிடிக்கப்பட்டது.  - படம்: பிக்சாபே

புதுடெல்லி: இந்தியாவில் இணையக் குற்றம், நிதி மோசடி உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு தொலைத்தொடர்பு வசதிகளை தவறாகப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய உள்துறை அமைச்சும் மாநில காவல்துறைகளும் இணைந்து கூட்டு ஆய்வை நடத்தின.

இதில் 28,000க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் இணையக் குற்றங்களை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

தகவல்களை தீவிரமாக ஆய்வு செய்த தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள், மோசடிக்கு பயன்படுத்த 28,000க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் மூலம் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட இணைப்புகள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த கைப்பேசி எண்கள் இந்தியா முழுவதும் பயன்பாட்டில் இருந்தவை ஆகும். இதைத்தொடர்ந்து அந்தக் கைப்பேசி எண்களையும் இணைப்புகளையும் முடக்குமாறு மத்திய தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டது.

சந்தேகத்திற்குரிய இணைப்புகளை உடனடியாக மறு ஆய்வு செய்து, அதில் போலியானவை எது என கண்டறிந்து அவற்றை துண்டிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
நிதி மோசடிஇணைய மோசடி

தொடர்புடைய செய்திகள்