நோட்டாவுக்கு ஓட்டு கேட்டு காங்கிரஸ் தீவிர பிரசாரம்

நோட்டாவுக்கு ஓட்டு கேட்டு காங்கிரஸ் தீவிர பிரசாரம்

1 mins read
bce08a33-11e0-4554-803a-92daba54bdfc
காங்கிரஸ் பிரசார நடவடிக்கையால் இத்தேர்தலில் நோட்டாவுக்கான வாக்குகளில் புதிய சாதனை படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் முதல் மூன்று கட்ட தேர்தல்களில் 21 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், உஜைன், இந்தூர் ஆகிய 8 தொகுதிகளுக்கு நான்காவது கட்டமாக மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்தூர் தொகுதியில் தற்போதைய பாஜக எம்.பி. சங்கர் லால்வானி மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அக்சய் காந்தி பாம் என்பவர் களமிறக்கப்பட்டார். ஆனால் காங்கிரசுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் அவர் கடைசி நேரத்தில் தனது வேட்புமனுவைத் திரும்பப்பெற்றுக் கொண்டு பாஜகவில் இணைந்தார்.

இந்தூர் தொகுதியில் 9 சுயேச்சைகள் உட்பட 14 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் பலம்வாய்ந்த வேட்பாளர் யாரும் இல்லாததால் அங்கு பாஜகவின் வெற்றி உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும் தற்போது இந்தூர் தொகுதியில் பிரசாரம் செய்து வருகிறது. தங்களுக்கு வாக்களிக்க விரும்புகிறவர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

காங்கிரஸ் பிரசார நடவடிக்கையால் இத்தேர்தலில் நோட்டாவுக்கான வாக்குகளில் புதிய சாதனை படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்