சாலையில் சிதறிய ரூ.7 கோடி

சாலையில் சிதறிய ரூ.7 கோடி

1 mins read
a798c40d-e76e-4b43-8331-8c11e69acbc8
வேனில் இருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறின. - படம்: பிக்சாபே

கோதாவரி: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நல்லஜார்லா அருகே லாரி மீது வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

அப்போது வேனில் இருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறின. இதைக் கண்டு சாலையில் சென்ற பிற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வேனில் 7 மூட்டைகளில் பணம் பதுக்கியிருந்ததைக் கண்டுபிடித்தனர். பின்னர் அதிகாரிகள் தேர்தல் தணிக்கை குழுவுக்கு தெரிவித்தனர்.

வேனில் இருந்த இருவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மூட்டைகளில் ரூ.7 கோடி பணம் இருந்தது முதற்கட்ட விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.

மேலும் அந்தப் பணம் ஐதராபாத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
விபத்து