மும்பை: மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரேசில் நாட்டுப் பயணி ஒருவர் சந்தேகப்படும் விதத்தில் நடந்துகொண்டார். அவரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத் திய போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார்.
இதையடுத்து, அவரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் சோதித்தபோது, 975 கிராம் எடையுள்ள கோகெய்ன் போதைப்பொருளை மாத்திரையாக உட்கொண்டு கடத்தி வந்திருப்பதை ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய அதிகாரிகள், அதன்பின்னர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரின் வயிற்றில் இருந்து ஏறக்குறைய ரூ.10 கோடி மதிப்பிலான 975 கிராம் எடை கொண்ட 110 கோகெய்ன் மாத்திரைகளை அதிகாரிகள் மீட்டனர்.

