படகு இரண்டாக உடைந்ததில் இரண்டு கேரள மீனவர்கள் பலி

படகு இரண்டாக உடைந்ததில் இரண்டு கேரள மீனவர்கள் பலி

1 mins read
813ff64b-9732-455b-a2e5-00e721cd5a58
விபத்தில் நான்கு மீனவர்கள் மீட்கப்பட்டனர். - கோப்புப் படம்: ஊடகம்

திருவனந்தபுரம்: சாகர் யூவராஜ் எனும் சரக்குப் படகு இரண்டாக உடைந்ததில் இரண்டு கேரள மீனவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் நான்கு பேர் அந்தப் படகிலிருந்து மீட்கப்பட்டனர் என்று கேரள கடலோரக் காவல்படை திங்கட்கிழமை அன்று தெரிவித்தது. அந்தப் படகின்மீது கப்பல் மோதியதாகக் கூறப்படுகிறது.

அந்தச் சம்பவம் திருச்சூர் மாவட்டத்திலிருந்து 14 கடல் மைல் தொலைவில் விடியற்காலை 1.30 மணியளவில் நிகழ்ந்ததாக பொன்னானியில் உள்ள கடலோரக் காவல்படைத் தெரிவித்தது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அப்துல் சலாம், 43, கஃபூர், 45 என அடையாளம் காணப்பட்டுள்ளது. இருவரும் அழீகாலில் வசித்தவர்கள். மீட்கப்பட்ட நால்வரின் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ‘த இண்டியன் எக்ஸ்பிரஸ்’ தகவல் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
விபத்து

தொடர்புடைய செய்திகள்