தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாலையில் குறுக்கே ஓடிய குரங்கு; காரும் லாரியும் மோதி மூவர் மரணம்

1 mins read
aaa9cb78-ac52-4d0d-a2ab-aed5eb5c6d1b
சாலையில் திடீரென்று ஒரு குரங்கு குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் காவல்துறை கூறியது. - சித்திரிப்பு: பிக்சாபே

மொராதாபாத்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் மொராதாபாத் நகரில் காரும் லாரியும் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.

திங்கட்கிழமை (மே 13), உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத்-அலிகார்ஹ் தேசிய நெடுஞ்சாலையில் இவ்விபத்து நடந்ததாகக் காவல்துறை கூறியது.

விபத்தில் உயிரிழந்த மூவரும் ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள் என்று கூறப்பட்டது. அவர்கள் சென்ற கார், லாரியுடன் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் மாண்டனர். மேலும் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் மாண்டார்.

சாலையின் குறுக்கே திடீரென்று ஒரு குரங்கு வந்ததால் இவ்விபத்து நடந்திருக்கக்கூடும் என்று காவல்துறை கூறியது.

விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
கார்விபத்து