ஆந்திராவில் நள்ளிரவு வரை நீடித்த சட்டப்பேரவைத் தேர்தல்

ஆந்திராவில் நள்ளிரவு வரை நீடித்த சட்டப்பேரவைத் தேர்தல்

1 mins read
5d43c69b-3a24-4211-842a-87ebb35e4ccb
ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் வாக்காளர்கள். - படம்: ஏஎஃப்பி

ஹைதராபாத்: ஆந்திராவில் திங்கட்கிழமை சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடந்து முடிந்தது. நண்பகலில் கடுமையான வெயில் கொளுத்தியதால் மக்கள் மாலை நேரத்தில் வாக்குச் சாவடிகளில் குவியத் தொடங்கினர். அதையடுத்து சில வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பு நள்ளிரவு 2 மணி வரை நடந்ததாகக் கூறப்படுகிறது.

சித்தூர், குப்பம், விசாகப்பட்டினம், குண்டூர், விஜயவாடா மற்றும் கோதாவரி ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் மக்கள் மாலை நேரத்தில் குவிந்ததால் சில இடங்களில் இரவு 7 மணிக்கு முடிய வேண்டிய வாக்குப்பதிவு நள்ளிரவு 2 மணிவரை நடந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஆந்திர மாநிலத் தேர்தல் ஆணையர் முகேஷ் குமார் மீனா கூறுகையில், இம்முறை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. சில இடங்களில் அதிகாலை 2 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.

“ஆந்திராவின் பல தொகுதிகளில் வாக்குப் பதிவு 81 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. குறிப்பாக ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் போட்டியிட்ட பிட்டாபுரம் தொகுதியில் 86.87 விழுக்காடு வாக்காளர்கள் தங்கள் தேசிய கடமையை ஆற்றியுள்ளனர்,” என்றார் தேர்தல் ஆணையர் முகேஷ்.

குறிப்புச் சொற்கள்