உறங்கிக்கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டபின் விட்டுச்செல்லப்பட்டார்

1 mins read
f75d5f24-8240-4a27-8e7d-48bede12853f
சிறுமியின் தங்கத்தோடுகளைத் திருடிய மர்ம நபர், பின்னர் சிறுமியை அவர் வீட்டருகே விட்டுச் சென்றார். - படம்: இணையம்

காசர்கோடு: கேரளாவின் காசர்கோடு மாவட்டத்திலுள்ள வீடு ஒன்றுக்குள் அதிகாலை மூன்று மணியளவில் புகுந்து உறங்கிக்கொண்டிருந்த 10 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் மே 15ஆம் தேதி நடந்தது.

சிறுமியின் மாமா பசும்பால் கறப்பதற்காக வீட்டைவிட்டு வெளியே காலடியெடுத்து வைத்த சமயம், இந்தக் கடத்தல் சம்பவம் நிகழ்ந்தது.

சிறுமி அணிந்திருந்த தங்கத்தோடுகளை அந்த மர்ம நபர் திருடிவிட்டு சிறுமி வீட்டிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் அவரை விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

கண்களிலும் கழுத்திலும் சிறுமிக்குக் காயங்கள் ஏற்பட்டிருந்தன.

மர்ம நபரைக் காவல் அதிகாரிகள் வலைவீசித் தேடிவருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்