சென்னை: சிங்கப்பூரில் இருந்து முதல் முறையாக, மிகப்பெரிய சரக்குக் கப்பல், கொள்கலன்களை ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகம் வந்துள்ளது.
‘ஏ.பி.எல்., பாஸ்டன்’ என்ற அந்த சரக்குக் கப்பல் 1.09 லட்சம் டன் எடையும், 328.2 மீட்டர் நீளமும் கொண்டது.
மேலும், இந்தக் கப்பலில் 9,326 டன் எடையுள்ள சரக்குகள், கொள்கலன்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கு முன் 2017 ஜனவரி 1ஆம் தேதி 14.8 மீட்டர் ஆழம் உடைய பெரிய சரக்குக் கப்பல் கையாளப்பட்டது. இதைவிட அதிக ஆழம் உடையதாக, தற்போதைய சரக்குக் கப்பல் கையாளப்பட்டுள்ளது. இதற்காக, சென்னை துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள், சரக்குமுனைய நடத்துநர்கள், கப்பல் முகவர் ஆகியோருக்கு, சென்னை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் பாராட்டுத் தெரிவித்தார்.

