தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒடிசாவில் தேர்தல் வன்முறை: ஒருவர் பலி; 7 பேர் படுகாயம்

1 mins read
1336e99b-62eb-4616-a40d-890274bc05fc
ஒடிசாவின் கல்லிக்கோட் பகுதியில் நடந்துள்ள வன்முறைச் சம்பவம் கவலையளிப்பதாக அந்த மாநிலத்தின் முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

புவனேஸ்வர்: ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் அஸ்கா தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீகிருஷ்ண சரணாபூர் கிராமத்தில் புதன்கிழமை இரவு தேர்தல் விளம்பரப் பதாகை ஒட்டுவது தொடர்பாக இரு கட்சித் தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

ஒடிசாவின் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளக்கட்சியினருக்கும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட அந்த மோதலில் பாஜகவை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். ஏழு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கல்லிகோட் சட்டமன்றத் தொகுதியின் பிஜு ஜனதா தள வேட்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சூர்யமணி பைத்யாவின் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களை பாஜ கட்சித் தொண்டர்கள் அடித்து நொறுக்கினர்.

மே 20ஆம் தேதி கல்லிகோட்டில் ஒரே நேரத்தில் சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த மோதலையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். கல்லிகோட் பகுதி வன்முறை துரதிர்‌ஷ்டவசமானது. நமது சமூகத்திலும் ஜனநாயகத்திலும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களுக்கு இடமில்லை என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்