கொச்சி: கேரள மாநிலத்தில் குண்டர் கும்பல் நடவடிக்கைகள் அதிகமாக இடம்பெறுவதாகப் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து அம்மாநில காவல்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
கேரளா முழுவதும் காவல்துறை அதிகாரிகள் புதன்கிழமை (மே 15) குண்டர் கும்பல்களைக் குறிவைத்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள் 300க்கும் அதிகமான குண்டர்களை கைது செய்தனர்.
கைது நடவடிக்கையின் போது கத்தி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் பிடிபட்டதாகவும் மேலும் பலர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

